கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே புதிதாக வைக்கப்பட்ட வேகத் தடையில் வண்ணம் பூசாததால் பெண் மூன்று வயது ஆண் குழந்தை உட்பட இருசக்கர வாகனத்தில் சென்ற மூன்று பேர் காயமடைந்தனர்.
இவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த கிராம மக்கள் வேகத்தடையில் வண்ண பூசாதத்தை கண்டித்து உளுந்தூர்பேட்டை விருதாச்சலம் சாலையின் குறுக்கே தடுப்புகள் போட்டு மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.