--- --:--:-- --

நேருக்கு நேர் மோதி கொண்ட பைக்குகள்..!

3

டலூர் அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி கொண்ட நெஞ்சை பத்திர வைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. அவலங்குடி பகுதியைச் சேர்ந்த கார்த்திக் தனலட்சுமி தம்பதியினர் ஐந்து மாத குழந்தையுடன் இரு சக்கர வாகனத்தில் குலதெய்வ கோவிலுக்கு சென்று விட்டு திரும்பினர்.

 

அப்பொழுது இவர்களது வாகனமும், கணேசன் என்பவர் ஓட்டி வந்த இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் கை குழந்தையுடன் தம்பதி இருவர் தூக்கி வீசப்படும் காட்சி அந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவானது.

 

படுகாயம் அடைந்தவர்களை போலீசார் மருத்துவமனையில் அனுமதித்திருக்கும் நிலையில் விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon