புதிய பைக்கில் படு வேகம்.. வளைவில் திரும்பும் போது விபத்து..!
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே புதிய பைக்கில் அதிவேகமாக சென்ற சபரி என்ற 19 வயது இளைஞர் வளைவில் திரும்பும் பொழுது தடுப்பு சுவரில் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
அவரது நண்பர் குமார் என்பவர் தலையில் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விலை உயர்ந்த பைக்கை வாங்கி கொடுத்த சபரியின் பெற்றோர் மகனை விபத்தில் பறிகொடுத்து தவிக்கின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





