--- --:--:-- --

பிரசவத்திற்கு பின் பெண்ணுக்கு ஊருக்குள் அனுமதி இல்லை.. வினோத கிராமம்..!

2

கர்நாடகாவில் ஒரு கிராமத்தில் ஆண்டாண்டு காலமாக பிரசவமான பெண்ணை ஊரை விட்டு ஒதுக்கி வைக்கும் நிலை உள்ளது. கர்நாடகாவில் தும்கூர் மாவட்டம் கொல்லாரப்பட்டி கிராமத்தில் பழங்காலத்தில் இருந்தே பெண்கள் யாரேனும் குழந்தை பெற்றால் அது தீட்டு மாதம் எனக்கூறி அவரை முதல் ஒரு மாதத்திற்கு ஊரை விட்டு ஒதுக்கி வைப்பதை பழக்கமாகக் கொண்டுள்ளனர்.

 

இந்த சூழலில் 2 தினங்களுக்கு முன்பு 28 வயதான பெண் ஒருவர் குழந்தையை பெற்ற நிலையில் டிஸ்சார்ஜ் ஆனவுடன் அவரை ஊருக்குள் அனுமதிக்காமல் ஊருக்கு வெளியே குழந்தையுடன் தங்க வைத்துள்ளனர்.

 

தாலுகா நீதிமன்ற நீதிபதி கீதாஞ்சலி அந்த கிராமத்திற்கு விரைந்து சென்று பெண்ணை ஊருக்குள் அனுமதிக்காவிட்டால் அனைவரின் மீதும் சட்ட நடவடிக்கை பாயும் என எச்சரித்தார். இதனையடுத்து கிராம மக்கள் அந்த பெண்ணை ஊருக்குள் அழைத்து சென்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon