தெரியாமல் நாட்டுத் துப்பாக்கில் இருந்து வெளிவந்த குண்டு.. விவசாயி காயம்..!
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே நாட்டு துப்பாக்கில் இருந்து குண்டு பாய்ந்ததால் விவசாயி படுகாயம் அடைந்தார். பருவதம் ஊட்டி கிராமத்தைச் சேர்ந்த பெருமாள். விவசாய நிலத்தில் இருந்த நாட்டு துப்பாக்கியை இயக்கி பார்த்துள்ளார்.
அப்பொழுது அதில் இருந்த குண்டு பாய்ந்ததில் பெருமாளின் இடது கால் பகுதியில் படுகாயம் ஏற்பட்டது. பின்னர் சிகிச்சைக்காக வர செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் அளித்த புகாரின் பேரில் நாட்டு துப்பாக்கியை பறிமுதல் செய்த போலீசார் பெருமாள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





