--- --:--:-- --

வழி விடாததால் பேருந்து ஓட்டுநர்களுக்கு இடையே தகராறு..!

2

சென்னை கோயம்பேட்டையில் வழி விடுவது தொடர்பாக மாநகர பேருந்து ஓட்டுநர்களுக்கு இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. சென்னை கொரட்டூரில் இருந்து தாம்பரத்திற்கு சென்று கொண்டிருந்த மாநகர பேருந்தை சிவானந்தம் இயக்கினார்.

 

கோயம்பேடு பேருந்து நிலையம் அருகே சென்ற பொழுது அண்ணா சதுக்கம், கோயம்பேடு மார்க்கெட்டில் இயக்கப்படும் மாநகர பேருந்துக்கு வழி விடுவதற்கான தகராறு ஏற்பட்டது. அப்பொழுது அந்த பேருந்தில் பணியில் இருந்த ஓட்டுனரின் நடத்துனர் பாலகுமார் ஆகியோர் சிவானந்தம் இயக்கி வந்த பேருந்துக்குள் சென்று வாக்குவாதம் செய்தனர்.

 

பேருந்தை விட்டு கீழே இறங்குமாறு சிவானந்தத்திடம் கூறினார். ஆனால் பேருந்திலிருந்து இறங்க மறுத்தவர் பேருந்து இயக்க தொடங்கினார். இதனால் ஆத்திரமடைந்த புண்ணியமூர்த்தியும் பாலகுமாரும் தொடரும் தகராறு செய்ததுடன் பேருந்தை நிறுத்த முயன்றனர்.

 

ஒரு கட்டத்தில் ஓட்டுநர் சிவானந்தம் புண்ணியமூர்த்தி மற்றும் பாலகுமாரிடையே கைகலப்பு ஏற்பட்டது. பின்னர் அங்கிருந்த பயணிகள் சமரசம் செய்து வைத்தனர். இரு பேருந்துகளாலும் பணிமனையை சேர்ந்தவை என்பதால் துரை ரீதியான விசாரணை நடைபெற்று வருகிறது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon