மாணவியின் வீட்டின் முன்பு மாணவர் தகராறு..!
கல்லூரி மாணவியிடம் பேச முடியாத ஆத்திரத்தில் அவரது வீட்டின் முன் ரகளையில் ஈடுபட்ட சக மாணவன் உட்பட மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர். சேலம் மாவட்டம் ஆத்தூர் அடுத்த தனியார் கல்லூரியில் பிரதீப் என்ற மாணவர் படித்து வருகிறார்.
இவருடன் படித்து வந்த மாணவி திடீரென வேறு கல்லூரிக்கு மாறிச் சென்று இருக்கிறார். இதனால் மாணவியுடன் பேச முடியாமல் போன ஆத்திரத்தில் பிரதீப் மற்றும் அவருடைய தந்தை உள்ளிட்ட மூன்று பேர் பெண்ணின் வீட்டிற்கு சென்று தகராறில் ஈடுபட்டிருக்கின்றனர்.
இது தொடர்பாக மாணவியின் தந்தை அளித்த புகாரின் பேரில் மூன்று பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





