அரசு வேலை வாங்கித் தருவதாக மோசடி.. ஓபிஎஸ் நிர்வாகி மீது புகார்..!
சேலத்தில் அரசு வேலை வாங்கி தருவதாக தனி நபரிடம் பணம் பெற்று மோசடி ஈடுபட்ட புகாரில் ஓபிஎஸ் நிர்வாகி மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சேலம் அரசு மருத்துவமனையில் கதிரவன் என்பவர் பாதுகாவலராக பணியாற்றி வந்துள்ளார்.
அப்பொழுது மருத்துவமனையில் உணவகம் நடத்தி வந்த தற்போது ஓபிஎஸ் அணி மாவட்ட செயலாளராக உள்ள தினேஷ் என்பவர் அரசு வேலை வாங்கி தருவதாக கூறியுள்ளார்.
இதனை நம்பி கதிரேசனிடம் மூன்று லட்சத்தி 85 ஆயிரம் ரூபாய் பணத்தை பெற்றுக்கொண்டு வேலை வாங்கி தராமல் ஏமாற்றியதாகவும் தெரிகிறது. இது குறித்து சேலம் மாணவர் காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ள நிலையில் போலீசார் தினேஷ் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





