பர்தா அணிந்திருந்ததால் ஹோட்டலில் உணவு வழங்கவில்லை என புகார்..!
பர்தா அணிந்ததால் ஹோட்டலில் உணவு வழங்க மறுத்ததாக கூறி சுற்றுலா பயணி ஒருவரின் சமூக வலைதள பதிவு வைரலாகி வரும் நிலையில் இதற்கு ஹோட்டல் உரிமையாளர் விளக்கம் அளித்துள்ளார் .
நெல்லை மாவட்டம் அம்பை அருகே உள்ள பாபநாசத்திற்கு குடும்பத்துடன் சுற்றுலா சென்ற நபர் ஒருவர் அங்குள்ள ஹோட்டலுக்கு குடும்பத்தினருடன் உணவருந்த சென்றதாக கூறப்படுகிறது. அப்பொழுது குடும்பத்தினர் ஃபர்தா அணிந்திருந்ததை காரணம் காட்டி தங்களுக்கு உணவு வழங்க மறுத்ததாக கூறி அவர் இணையத்தில் பதிவிட்ட பதிவு பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.
இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில் இது குறித்து விளக்கம் அளிக்க ஹோட்டல் உரிமையாளர் கோபால் தாங்கள் எந்த ஒரு பாகுபாடும் காட்டவில்லை என்றும் சந்தேகம் இருந்தால் கடையில் உள்ள சிசிடிவி காட்சிகளை சரி பார்த்துக் கொள்ளுங்கள் எனவும் தெரிவித்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





