--- --:--:-- --

காதல் வலையில் சிக்கிய 16 வயது சிறுமியை கர்ப்பம் ஆக்கிய காதலன்..!

6

ரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே 11ஆம் வகுப்பு மாணவி காதலிப்பதாக கூறி கர்ப்பமாக்கிய கூலி தொழிலாளியை வீட்டில் போலீசார் கைது செய்தனர்.

 

தத்தனூர் காலனியைச் சேர்ந்த கூலி தொழிலாளி வீரபாண்டியன் என்பவர் பதினோராம் வகுப்பு படிக்கும் 16 வயது சிறுமியை காதலிப்பதாக கூறி நெருங்கி பழகவே சிறுமி கர்ப்பம் அடைந்தார். இதையடுத்து வீரபாண்டியனின் தாய் அக்கா கஸ்தூரி ஆகியோர் சிறுமியை அழைத்து சென்று கர்ப்பத்தை கலைத்துள்ளனர்.

 

இது குறித்து பாதிக்கப்பட்ட சிறுமி அளித்த புகாரின் அடிப்படையில் வீரபாண்டியன், அவரது தாய் அக்கா ஆகியோர் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்த அனைத்து மகளிர் போலீசார் வீரபாண்டியனை கைது செய்தனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon