--- --:--:-- --

திருநங்கை கொலை வழக்கு.. நீதிமன்றம் போட்ட முக்கிய உத்தரவு..!

8

இரண்டு காவல் ஆய்வாளர்களை குற்றவாளிகளாக காஞ்சிபுரம் மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஸ்ரீபெரும்புதூர் பகுதியைச் சேர்ந்த திருநங்கை சின்னராசு கொலை செய்யப்பட்ட வழக்கில் ஆறு பேர் கைது செய்யப்பட்டனர்.

 

காஞ்சிபுரம் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கின் விசாரணை நடைபெற்று வந்த நிலையில் இரண்டு நபருக்கு 17 வயது என காவல்துறை கூறியுள்ளதால் போக்சோ வழக்காக மாற்ற வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.

 

இந்த நிலையில் போக்சோ சட்டப்படி வழக்குப்பதிவு செய்யாததாலும் நீதிமன்ற உத்தரவின் படி நேரில் ஆஜராகாதாலும் ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலையத்தில் ஆய்வாளராக இருந்த நடராஜன் மற்றும் அவருக்கு பின் வந்த ஆய்வாளர் ஆகியோரை குற்றவாளிகளாக சேர்த்த நீதிபதி கைது செய்ய பிறப்பித்தார்.

 

கொலை குற்ற வழக்கில் இரண்டு காவல் ஆய்வாளர்கள் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டு நீதிபதி பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon