ஜார்கண்ட் முதல்வர் கைதாக வாய்ப்பு..144 தடை..!
நில மோசடி தொடர்பான வழக்கில் ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனிடம் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். நிலமோசடி குறித்த வழக்கில் ஹேமந்த் சோரனுக்கு பலமுறை சம்மன் அனுப்பிய நிலையில் கடந்த வாரம் அவரது வீட்டிலேயே விசாரணை நடத்தப்பட்டது.
இந்த நிலையில் டெல்லியில் உள்ள ஹேமந்த் சோரன் திட்டத்தில் 36 லட்சம் ரூபாய் ரொக்கம், சொகுசு கார் உள்ளிட்டவற்றை அமலாக்க துறையினர் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். கட்சியினர் போராட்டம் காரணமாக முதல்வரின் நிலத்தை சுற்றியும் 144 தடை அமல்படுத்தப்பட்டது.
முதல்வர் இல்லத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. முக்கிய பகுதிகளில் 2000 பாதுகாப்பு படையினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஜார்கண்ட் முதல்வர் கைது செய்யப்படலாம் என தகவல் வெளியானதால் பாதுகாப்பு அதிகரிக்கப் பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





