தமிழில் பேசியதால் மாணவனின் காதை திருகிய ஆசிரியை..!
சென்னையில் 5ம் வகுப்பு மாணவனின் காதை திருகிய சம்பவத்தில் ஆசிரியை கைது செய்ய கோரி மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். வடசென்னை ராயபுரம் பகுதியில் அமைந்துள்ள தனியார் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு பயின்று வரும் மாணவன் மணிஷ் விக்ரம்.
இவன் கடந்த நான்கு தினங்களுக்கு முன்பு பள்ளியின் கதை ஆசிரியரால் காது திருகப்பட்டு பிளாஸ்டிக் சர்ஜரி வரை சென்றிருந்தார். சாதாரண பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு இருப்பதாகவும் அவர் மீது குழந்தைகள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் உடனடியாக கைது செய்ய வேண்டும் எனவும் தெரிவித்தனர்.
இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆசிரியைக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





