--- --:--:-- --

அயோத்தியை விட 5 மடங்கு பெரிய ராமர் கோயில்..!

2

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட வரலாற்று நினைவான அயோத்தி ராமர் கோயில் ஜனவரி 22ஆம் தேதி திறக்கப்பட்டது.பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்பட்ட இந்த கோயிலில் 51 அங்குல பால ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது.

 

அயோத்தியில் அமைந்துள்ள கோயிலை விட இந்தியாவில் 5 படங்கு பெரிய ராமர் கோயில் உருவாகி வருகிறது. 1080 அடி நீளமும் 540 அடி அகலமும் கொண்ட இந்த கோயில் பிரம்மாண்ட ராமர் கோயில் என்றழைக்கப்படும்.

 

5 கோபுரங்களாக உருவாகும் இந்த கோயிலில் மிக உயரமான கோபுரம் 405 அடியிலும், மீதமுள்ள 4 கோபுரமும் 180 அடியிலும் கட்டப்படவுள்ளது. மேலும் இந்த கோயில் நுழைவு வாயிலில் 20ஆயிரம் பேர் அமர்ந்து பிரார்த்தனை செய்யக்கூடிய அளவில் ஒரு பெரிய பிரார்த்தனை கூடம் ஒன்று அமையவுள்ளது.

 

கோயில் முழுமையாக கட்டப்பட்ட பிறகு ஜனக்பூர் வழியாக அயோத்தி செல்லும் மக்கள் இந்த கோயிலை தூரத்தில் இருந்தே காணமுடியும். தற்போது இதன் கட்டுமான பணிகள் வேகமாக நடந்து வரும் நிலையில், 2025ம் ஆண்டு இறுதிக்குள் கோவில் தயாராகிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

பீகார் மாநிலம் கிழக்கு சம்பாரனில் உள்ள கைத்வாலியாவில் இந்த ராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. அயோத்தியில் கட்டப்படும் ராமர் கோயிலை விட இந்த கோவில் ஐந்து மடங்கு பெரியதாக இருக்கும். இதன் பெயர் விராட் ராமாயண கோவில் என வைக்கப்பட்டுள்ளது. கோவிலின் கட்டுமானப் பணிகள் மே 2023-ல் தொடங்கியது.

 

இந்த விராட் ராமாயண கோவில் கைத்வாலியா கிராமத்தில் கேசரியா-சைகா சாலையின் ஓரத்தில் கட்டப்பட்டு வருகிறது. இந்த இடம் வைஷாலியிலிருந்து 60 கிமீ தொலைவிலும், பாட்னாவிலிருந்து 120 கிமீ தொலைவிலும் உள்ளது.

 

இந்த கோயிலின் திட்டம் 2012-ல் தொடங்கியது. இது பாட்னாவில் உள்ள மகாவீர் கோவிலின் லட்சிய திட்டமாகும். மொத்தம் 18 தெய்வங்கள், 18 சன்னதிகள் உள்ளன, அவற்றில் முதன்மைக் கடவுளான ராமர், நடுவில் உள்ள கோபத்திற்கு அமையவுள்ளார். மேலும், அங்கு அவரது மனைவி சீதா மற்றும் லவ, குஷ் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.இந்த கோயிலின் வடிவமைப்பு அங்கோர் வாட், ராமேஸ்வரம் மற்றும் மீனாட்சி கோவில்களின் கூறுகளால் ஈர்க்கப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon