--- --:--:-- --

நடுரோட்டில் மாணவியின் தலைமுடியை பிடித்து இழுத்து சென்ற பெண் போலீஸ்..!

3

அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்ட ஏ பி வி பி இயக்கத்தை சேர்ந்த மாணவியின் தலைமுடியை ஸ்கூட்டரில் பயணித்தவாரே பிடித்து இழுத்து கீழே தள்ளிய பெண் போலீசின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

தெலுங்கானா மாநிலம் ஜெய்சங்கர் பூபாலபள்ளி மாவட்டத்தில் ஜெய்சங்கர் தெலுங்கானா விவசாய பல்கலைக்கழகம் உள்ளது. பல்கலைக்கழகத்திற்கு சொந்தமான நிலத்தில் உயர் நீதிமன்றத்திற்கு தேவையான கட்டிடத்தை கட்ட தெலுங்கானா மாநில அரசு அனுமதி அளித்துள்ளது. இதனை கண்டித்து பல்கலைக்கழகத்தின் ஏ பி வி பி மாணவர் அணியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

நேற்று போராட்டம் நடைபெற்ற நிலையில் ஏ பி பி இயக்கத்தை சேர்ந்த மாணவ மாணவிகளை போலீசார் விரட்டி அடித்தனர். அப்போது ஒரு மாணவி போலீசாரிடம் பிடிபடாமல் தப்புவதற்காக சற்று தூரம் ஓடிய நிலையில் பெண் போலீசார் இரண்டு பேர் ஸ்கூட்டரில் பயணித்தவாறு அவரை விரட்டி சென்று தலைமுடியை பிடித்த படி தரதரவென இழுத்து சென்றார்.

 

இதில் அந்த மாணவி நிலை குலைந்து கீழே விழுந்து சாலையில் இழுத்து செல்லப்பட்டார். இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வர பி ஆர் எஸ் கட்சி மேலவை உறுப்பினர் கவிதா உள்ளிட்ட பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon