பள்ளி மாணவர்களின் காலில் விழப் போன எம்.எல்.ஏ வால் பரபரப்பு..!
சேலத்தில் விலை இல்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சியில் அரசு பள்ளி மாணவ மாணவிகள் நடந்த சம்பவத்திற்காக அரசு பள்ளி மாணவ மாணவிகளிடம் நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் மன்னிப்பு கேட்டுள்ளார்.
சேலம் மேற்கு சட்டமன்றத் தொகுதி அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு தமிழ்நாடு அரசு வழங்கும் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாமக சட்டமன்ற உறுப்பினர் திமுகவில் இருக்கும் எம்எல்ஏக்கள் உடன் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில் சமாதானம் ஏற்பட்டதால் சட்டமன்ற உறுப்பினர் மாணவிகளுக்கு மிதிவண்டிகளை வழங்கினார். இதனை தொடர்ந்து மிதிவண்டிகள் வழங்கிய பொழுது நடந்த சம்பவத்திற்காக மாணவ மாணவிகளின் காலில் விழுந்து சட்டமன்ற உறுப்பினர் வருத்தம் தெரிவித்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





