புதுமனை புகுவிழாவிற்காக காத்திருந்த வீடு சரிந்து விழுந்ததால் அதிர்ச்சியில் கதறிய குடும்பம்..!
புதுச்சேரி ஆட்டுப்பட்டி பகுதியில் கார் ஓட்டுநர் சுரேஷ் புதிதாக கட்டியுள்ள வீடு இடிந்து விழுந்தது. பிப்ரவரி ஒன்றாம் தேதி கிரகப்பிரவேசம் வைத்திருந்த நிலையில் இரண்டு அடுக்குமாடி கட்டடம் வீடு இடிந்து விழுந்தது.
வீட்டின் அருகே உப்பனாறு வாய்க்காலை தூர்வாரும் பணி நடைபெற்று வந்தது. இடிந்து விழுந்த பொழுது வீட்டிற்குள் யாரும் இல்லாததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





