--- --:--:-- --

ராமர் கோயில் திறப்பு விழா : திருப்பூரில் தயாராகும் ’ஜெய் ஸ்ரீராம்’ டி-ஷர்ட்டுகள்!

5

ராமர் கோவிலில் நடைபெறும் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, திருப்பூரிலிருந்து ராமர் படம், ஜெய் ஸ்ரீ ராம் வாசகங்கள் பிரிண்ட் செய்யப்பட்ட டி-ஷர்ட்கள் அனுப்பும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது.

 

உத்தரப்பிரதேச மாநிலம், அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேகம் ஜனவரி 22 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில், திருப்பூரில் இருந்து ஸ்ரீராம் ஜெயராம் என்ற ஹிந்தி வாசகம் அச்சிடப்பட்ட ஸ்ரீ ராமர் படம், அயோத்தி கோவில் படங்களுடன், 108 ஜெய் ஶ்ரீ ராம் எனும் வாசகங்கள் கொண்ட டீ சர்ட்கள் தயாரித்து அனுப்பும் பணியானது சுறுசுறுப்படைந்துள்ளது.

 

ஸ்ரீராம் என்று 108 முறை அச்சிடப்பட்ட டி-ஷர்ட், ஜென்ம பூமி ராம் என்று அச்சிடப்பட்ட குளிர்கால ஆடைகள், ஸ்ரீ ராமரை அழைத்து வந்தவர்கள், ஸ்ரீராமரை அழைப்பவர்களை அழைத்துச் செல்வோம், ஸ்ரீ ராமரை ஏற்போம் என்ற பல வாசகங்களை ஹிந்தியில் அச்சிட்டு இலட்சக்கணக்கான டி-ஷர்ட்டுகள் தயாரிக்கப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

 

இது குறித்து டீ-ஷர்ட் தயாரிப்பாளர் கார்த்திகேயன் கூறுகையில், அயோத்தியில் ராமர் கோவில் அமைந்தபின், திருப்பூருக்கு புதிய தொழில் வர்த்தக வாய்ப்பு கிடைத்துள்ளது என்று கூறினார். மேலும், தற்போது வெள்ளை மற்றும் காவி கலர் டி-ஷர்ட்களை வாங்கி செல்கின்றனர்.

 

ஜெய் ஸ்ரீ ராம் என்ற ட்ரேடு மார்க்குடன் திருப்பூர் டீ-ஷர்ட்டுகளுக்கு தொடர்ச்சியாக ஆர்டர் கிடைக்கும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என்றும் கூறினார். இதுவரை 100 லிருந்து 500 ரூபாய் மதிப்பிலான, 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட டீ-ஷர்ட்கள் தயாரித்து அனுப்பபட்டுள்ளதாகவும், தற்போது மேலும் தயாரித்து அனுப்பும் பணி தீவிரமாக நடந்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon