--- --:--:-- --

பொங்கல் பண்டிகையொட்டி தமிழ்நாடு முழுவதும் 50,000 காவல்துறையினர் பாதுகாப்பு..!

6

காவல்துறையினர் 24 மணிநேரமும் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் நியமிக்கப்பட்டுள்ளனர். பொங்கல் திருநாளை முன்னிட்டு பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்கள் சுற்றுலா தளங்களில் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தடுக்க தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு காவல்துறை சார்பில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

 

பல்வேறு மாவட்டங்களுக்கு பொதுமக்கள் செல்வதால் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் மற்றும் வாகன விபத்து ஏற்படாமல் தடுக்க நெடுஞ்சாலை ரோந்து வாகனங்கள் மற்றும் சம்பந்தப்பட்ட மாவட்ட மாநகர காவல் துறையினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

 

அதிவேகமாகவும், அஜாக்கிரதையாகவும், மதுபோதையிலும் வாகனம் ஓட்டுபவர்கள் மற்றும் பெண்கள் குழந்தைக்கு எதிரான செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறை எச்சரித்துள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon