--- --:--:-- --

விமானத்தில் கொண்டு செல்லப்பட்ட சிறுமியின் உடல்.. மனம் உடைந்து அழுத தாய்..!

7

நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே சிறுத்தை தாக்கி சிறுமி உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து நடைபெற்ற போராட்டத்தில் சிறுமியின் தாய்க்கு பெண் காவலர் கண்ணீர் மல்க உணவு ஊட்டி விட்டார்.

 

சிறுமியை கொன்ற சிறுத்தையை பிடிக்க வலியுறுத்தி நடைபெற்ற போராட்டத்தில் சிறுமியின் தாய் கலந்து கொண்டார். அவர் உணவு, தண்ணீர் இல்லாமல் அழுது கொண்டே இருந்தார். பெண் காவலர் தனக்கு வழங்கப்பட்ட மதிய உணவை அவருக்கு கண்ணீர் மல்க ஊட்டி விட்டார்.

 

அந்த காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வரும் நிலையில் மனிதாபிமானத்துடன் செயல்பட்ட பெண் காவலருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. நீலகிரி மாவட்டம் பந்தலூரில் சிறுமி தாக்கி உயிரிழந்த சிறுமி உடல் சொந்த மாநிலமான ஜார்கண்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

 

பதப்படுத்தப்பட்ட உடல் சிறுமியின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆறுதல் கூறிய மாவட்ட ஆட்சியர் அருணா நான்சியின் தாயை ஆரத் தழுவி கண்ணீர் மல்க வருத்தம் தெரிவித்தார். சிறுமியின் பெற்றோரிடம் தமிழக அரசு அறிவித்த 10 லட்சம் ரூபாய் நிதி உதவிக்கான காசோலையும் வழங்கப்பட்டது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon