ஆம் ஆத்மி எம்.பி சஞ்சய் சிங்கின் ஜாமீன் மனு தள்ளுபடி..!
மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங்கின் ஜாமின் மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. டெல்லியில் அமல்படுத்தப்பட்ட புதிய மதுபான கொள்கையில் முறைகேடுகள் நடந்ததாக புகார்கள் எழுந்தன.
இது குறித்து வழக்கு பதிவு செய்த விசாரணை மேற்கொண்ட அமலாக்கத்துறையினர் ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் வீடு தொடர்புடைய இடங்களில் சோதனை மேற்கொண்டனர்.
இதை தொடர்ந்து சஞ்சய் சிங்கை கடந்த அக்டோபர் 4ம் தேதி அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். விசாரணையில் காவல் நீட்டிக்கப்பட்ட நிலையில் தற்போது நீதிமன்ற காவலில் அவர் உள்ளார்.
வரும் ஜனவரி 10ஆம் தேதி வரை அவருக்கு நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சஞ்சய் சிங் தாக்கல் செய்த ஜாமின் மனுவை விசாரிக்க டெல்லி நீதிமன்றம் அவரது மனதை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





