சாலையோரம் நடப்பட்டிருந்த திமுக கொடிக்கம்பத்தால் விபரீதம்..!
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே திருமண நிகழ்ச்சிக்காக அமைச்சர்களை வரவேற்க வைக்கப்பட்டிருந்த திமுக கொடி கம்பம் சாய்ந்து விழுந்து விவசாயி ஒருவரின் பற்களை பதம் பார்த்திருக்கிறது.
அருப்புக்கோட்டை அருகே அகரத்துப்பட்டியில் திமுக நிர்வாகியின் இல்ல திருமணம் நடந்துள்ளது. இதற்காக இந்த பகுதியில் அமைச்சர்களை வரவேற்று திருச்சூலி சார்பில் ஏராளமாக திமுக கொடி கம்பங்கள் நடப்பட்டு பேனர்கள் அமைக்கப்பட்டிருந்தன.
இந்த நிலையில் செவல்பட்டி கார்த்திகை நகரை சேர்ந்த சண்முகவேல் என்ற விவசாயி அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் சென்ற பொழுது திமுக கொடி கம்பம் அவரது முகத்திலேயே சாய்ந்து விழுந்துள்ளது.
இதில் விவசாயி சண்முகம் 5 பற்கள் உடைந்தன. காயம் அடைந்த சண்முகவேல் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





