--- --:--:-- --

மிக்ஜாம் புயல் நிவாரண நிதியாக நடிகர் சூரி கொடுத்த தொகை..!

12

தமிழ்நாடு என்றாலே முதல் அடையாளம் சென்னை தான், ஆனால் இப்போது அழகிய சென்னையாகவே இல்லை. காரணம் எல்லோருக்கும் தெரிந்தது தானே, மிக்ஜாம் புயல் அதன் கோர தாண்டவத்தை காட்டிவிட்டு சென்றுள்ளது.

 

இதனால் மக்கள் கடும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர், வீடு, சாப்பாடு, ஆடை, கரெண்ட் என எதுவும் இல்லாமல் தவிக்க அரசும், தனியார் நிறுவனங்களும், பிரபலங்களும் தங்களால் முயன்ற உதவிகளை செய்து வருகிறார்கள்.

 

ஆனால் இன்னமும் புயலின் தாக்கம் நீங்கவில்லை என்று தான் கூற வேண்டும். புயல் தாக்கத்தால் மக்கள் அவதிப்பட்டுள்ளனர் என்ற செய்தி வந்தவுடனே சூர்யா மற்றும் கார்த்தி ரூ. 10 லட்சம், நடிகர் விஷ்ணு ரூ. 10 லட்சம், சிவகார்த்திகேயன் ரூ. 10 லட்சம் என வெள்ள நிவாரண நிதி கொடுத்தனர்.

 

இந்த நிலையில் நடிகர் சூரியும் தனது சார்பிலும் தான் நடத்தி வரும் மதுரை அம்மன் உணவகம் சார்பிலும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து பத்து லட்ச ரூபாய் வெள்ள நிவாரண நிதியாக அளித்துள்ளார். இதுகுறித்து உதயநிதி ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்திலும் பதிவு செய்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon