--- --:--:-- --

மீண்டும் வேகம் எடுக்கும் கொரோனா..!

4

கடந்த 2019 ஆம் ஆண்டு பரவ தொடங்கிய கோவிட் 19 வைரஸால் உலகம் முழுவதும் இந்திய, சீனா, ரஷ்யா, அமெரிக்க, ஐரோப்பா, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர்.

 

கொரோனா பரவலால் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். கொரோனா பெருந்தொற்று காரணமாக உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டது.

 

கொரோனா தாக்கத்தில் இருந்து கடந்த இரண்டு ஆண்டுகளாகதான் உலக நாடுகள் மீண்டு வருகின்றன. இந்நிலையில் மீண்டும் மிரட்ட தொடங்கியுள்ளது கொரோனா வைரஸ். சிங்கப்பூரில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

 

கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், சிங்கப்பூரில் உள்ள மருத்துவமனைகளில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon