--- --:--:-- --

ஓடும் வெள்ளத்தில் சோப்பு போட்டு குளித்து விளையாடும் மக்கள்..!

6

திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த இரண்டு தினங்களாக அதிக கன மழை பெய்து வந்தது. இதன் காரணமாக வெளியேறும் நீரால் ஜனப்பசத்திரம் பெரிய பாளையம் வழியாக திருப்பதி செல்லும் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

 

சாலையில் இடுப்பளவு செல்லும் தண்ணீரில் பொதுமக்கள் சோப்பு போட்டு குளித்து விளையாடினர். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர் மழை காரணமாக 50 ஏக்கரில் நெற்பயர்கள் சேதம் ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

 

ஆதனூர், இரும்பேடு உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட பகுதிகளில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. நெற்பயிர்கள் நீரில் நனைந்து தரை மட்டத்தில் சாய்ந்து கிடப்பதால் நெற்ப்பயறு முளைத்து விட்டு முழுமையாக சேதம் அடைந்துள்ளன என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon