வெறி நாய் கடித்த 12 வயது சிறுவன் உயிரிழப்பு..!

நெய்வேலி அருகே வெறிநாய் கடித்து ஒரு மாதத்திற்கு பிறகு சிறுவன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிக்கும் அன்பழகன் என்பவரின் 12 வயது மகன் விளையாடிக் கொண்டிருந்த பொழுது நாய் கடித்துள்ளது.

 

இதனால் படுகாயம் அடைந்த சிறுவன் பண்ருட்டி அரசு மருத்துவமனைகள் சேர்க்கப்பட அவருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது. ஆனால் ஒரு மாதமாகவே சிறுவன் உடல்நலம் பாதிக்கப்பட்டதாக தெரிகிறது.

 

சிறுவனின் நடவடிக்கை மாறியதால் பதற்றம் அடைந்த பெற்றோர் அவனை கடலூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்ல அவர்கள் புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளனர். ஆனால் செல்லும் வழியில் ஆம்புலன்சிலே பரிதாபமாக உயிரிழந்தான்.

 

தனது மகனுக்கு ராபிஸ் வைரஸ் தாக்கியதாக கடலூர் அரசு மருத்துவமனை நிர்வாகிகள் கூறியதாகவும் பிரேத பரிசோதனைக்கு பின்னர் உடலை தராமல் எரியூட்டியதாகவும் சிறுவனின் பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர்.

 

நாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில் இதற்கும் தங்களுக்கும் சம்பந்தம் இல்லை என்று குறிஞ்சிப்பாடி வட்டார வளர்ச்சி அலுவலர் தெரிவித்துள்ளார்.