மிகவும் வித்தியாசமான உடை அணிந்து காதலனுடன் நிகழ்ச்சிக்கு வந்த நடிகை தமன்னா

மிழில் கேடி படத்தின் மூலம் வில்லியாக அறிமுகமானவர் நடிகை தமன்னா. அதன்பிறகு கல்லூரி. வியாபாரி என படங்கள் நடித்த அவர் விஜய், அஜித், கார்த்தி, ஜெயம் ரவி என முன்னணி நாயகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்தார். தமிழை போல தெலுங்கிலும் வெற்றிகொடியை நாட்டினார்.

 

தமிழில் இப்போதெல்லாம் அவருக்கு வாய்ப்புகள் குறைய பாலிவுட் பக்கம் சென்றார். அங்கு அவர் நடித்த பப்ளி பவுன்ஸர், ப்ளான் ஏ ப்ளான் பி உள்ளிட்ட படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது.

 

அண்மையில் தமிழில் ரஜினியின் ஜெயிலர் படத்தில் காவாலா பாடலுக்கு நடனம் ஆடி மீண்டும் தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்திற்கு வந்துள்ளார்.படங்களில் நடிப்பதை தாண்டி நடிகை தமன்னா நிறைய வித்தியாசமான உடைகள் அணிந்து போட்டோ ஷுட் நடத்துவது, நிகழ்ச்சிகளுக்கு செல்வது என பிஸியாக இருக்கிறார்.

 

அண்மையில் அவர் மேலாடையில் வித்தியாசமான உடை அணிந்து தனது காதலருடன் நிகழ்ச்சிக்கு வந்துள்ளார், அதைப்பார்த்த ரசிகர்கள் சிலர் என்ன உடை இது என்றும் கமெண்ட் செய்து வருகிறார்கள்.