2ஜி மேல்முறையீடு வழக்கு விசாரணை 21ஆம் தேதிக்கு தள்ளிவைப்பு..!
2ஜி மேல்முறையீட்டு வழக்கு விசாரணை 21ஆம் தேதிக்கு தள்ளி வைத்து டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2ஜி அமலாக்கத்துறை ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக சிபிஐ மத்திய அமலாக்க துறை கொடுத்த அறிக்கை குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, திமுக கனிமொழி உள்ளிட்ட 14 பேரையும் விடுவித்தது.
சிபிஐ சிறப்பு நீதிமன்றம் கடந்த 2017 ஆம் ஆண்டு தீர்ப்பு கூறியது. இந்த தீர்ப்புக்கு எதிராக சிபிஐ அமலாக்கத்துறை சார்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை நீதிபதி விசாரித்து வருகிறார்.
இந்நிலையில் நடைபெற்று வரும் விசாரணையின் போது சிபிஐ சார்பில் ஆஜரான அரசு தரப்பு சிறப்பு வழக்கறிஞர் சஞ்சீவ் 2ஜி வழக்கு தொடர்ந்து தனது பாதையை சுட்டிக்காட்டி வாதங்களை நிறைவு செய்தார். இவற்றை பதிவு செய்து கொண்ட நீதிபதி விசாரணையே வரும் 21ஆம் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





