தமிழகம் முழுவதும் இன்று சரக்கு வாகனங்கள் வேலை நிறுத்தம்..!
தமிழகம் முழுவதும் லாரி உள்ளிட்ட சரக்கு வாகன உரிமையாளர்கள் இன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர். சாலை வரியை குறைக்க வேண்டும், ஆன்லைன் மூலம் வாகனங்களுக்கு அபராதம் விதித்து வழக்கு பதிவு செய்வதை கைவிட வேண்டும். மூடப்பட்ட மணல் குவாரிகளை திறக்க வேண்டும்.
காலாவதியான சுங்கச்சாவடிகளை மூட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று 12 மணி நேர வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்படும் என்று லாரி உரிமையாளர் சம்மேளன தலைவர் கூறியிருக்கிறார்.
இந்த வேலை நிறுத்தத்தால் 5 லட்சம் லாரிகள் 20 லட்சம் வாகனங்கள், சரக்கு ஆட்டோக்கள், டேங்கர் லாரிகள், டூரிஸ்ட் வேன்கள் உள்ளிட்டவைகள் இயங்காது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





