--- --:--:-- --

கள்ள காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை கொலை செய்த மனைவி..!

9

தகாத உறவை கண்டித்த கணவனை ஆத்திரத்தில் கொலை செய்து உடலை எரித்த சம்பவத்தில் மனைவியும் மற்றும் அவரது கள்ளக்காதலனை போலீசார் கைது செய்தனர்.

 

அரியலூர் மாவட்டம் தென்மாகொண்டா வனத்துறைக்கு சொந்தமான கள்ளங்காடு முந்திரி காட்டில் எரிக்கப்பட்ட நிலையில் அடையாளம் தெரியாத சடலத்தை கடந்த 30 ஆம் தேதி போலீசார் கண்டறிந்தனர்.

 

இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில் சந்தேகத்தின் பேரில் வேல்முருகன் என்பவரை பிடித்து விசாரணை நடத்தினார். அவர் உயிரிழந்த நபர் சுரேஷ் என்பதும் அவரது மனைவி அனுப்ரியா என்பவர் உடன் உறவினரான வேல்முருகன் தகாத உறவில் இருந்து வந்ததும் தெரிய வந்துள்ளது.

 

அனுப்பிரியா கள்ளக்காதலன் உடன் சேர்ந்து வீட்டில் இருந்த சுரேஷை அரிவாளால் சாராம்ரியாக வெட்டி கொலை செய்துள்ளார். பின்னர் உடலை சாக்கு பையில் மூட்டை கட்டி பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொளுத்தியது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

 

அதனை தொடர்ந்து வேல்முருகன் மற்றும் அனுப்பிரியாவை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon