--- --:--:-- --

முதலமைச்சர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது..!

8

தமிழக முதலமைச்சரின் இல்லம் உள்பட எட்டு இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததை நபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

நீலகிரி மாவட்டம் தாம்படியைச் சேர்ந்த கணேசன் இவர். தினம்தோறும் மது அருந்தி விட்டு உடல்நிலை சரியில்லை என ஆம்புலன்ஸ் அவசர சேவை மையத்திற்கு தொடர்பு கொள்வதை வழக்கமாக வைத்துள்ளார்.

 

அதேபோன்று நேற்று தொடர்பை கொண்டு ஆம்புலன்ஸ் அனுப்பி மருத்துவமனையில் சேர்க்குமாறு தெரிவித்துள்ளார் ஆம்புலன்ஸ் ஊழியர் முடியாது என கூறியதால் தமிழக முதலமைச்சரின் இல்லம் உள்பட 8 இடங்களுக்கு அவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தார்.

 

இது குறித்து சென்னை தலைமை கட்டுப்பாட்டு மையத்திற்கு அவசர சேவை மையம் புகார் அளித்தது. அதைத் தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்த கணேசனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon