பள்ளி கல்லூரிகளுக்கு தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை அறிவிப்பு..!
தீபாவளிக்கு அடுத்த நாள் விடுமுறை அளித்து தமிழக அரசு, அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மாணவர்களின் கோரிக்கையை ஏற்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தீபாவளிக்கு அடுத்த நாளாக திங்கட்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசு அலுவலகங்கள், பொது நிறுவனங்கள், கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 13ஆம் தேதி விடுமுறையை ஈடு செய்ய வரும் 18ஆம் தேதி வேலை நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





