--- --:--:-- --

இரண்டு நாட்களுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை..!

7

லைநகர் டெல்லியில் காற்றின் மாசு அதிகரித்துள்ளதால் பாதுகாப்பு கருதி இரண்டு நாட்களுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

 

அத்யாவசியமற்ற பணிகள் மேற்கோள்ள கட்டுமான பணிகள் மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் தலைநகர் டெல்லியில் காற்று மாசு அதிகரிக்க தொடங்கியுள்ளது.

 

இதற்காக டெல்லியில் குளிர்கால செயல் திட்டத்தின் படி அண்டை மாநிலங்களிலிருந்து டெல்லிக்குள் பேருந்துகள் நுழைய தடை விதிக்கப்பட்டது. இருப்பினும் காற்றின் தரக்குறியின் அளவு தொடர்ந்து அதிகரித்து 42 ஆக பதிவாகி அபாய கட்டத்தை எட்டியுள்ளது.

 

நேற்று நடைபெற்ற மத்திய அரசின் மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் கூட்டத்தில் அத்தியாவசிய தேவைகளை தவிர்த்து மற்ற கட்டுமான பணிகளை மேற்கொள்ள தடை விதிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon