பேருந்து நிலையத்திற்கு புதிதாக கட்டப்பட்ட இலவச கழிவறை திறக்கப்படாததால் பயணிகள் அவதி..!
திருவாரூர் பேருந்து நிலையத்தில் புதிதாக கட்டப்பட்ட இலவச கழிவறை திறக்கப்படாததால் பயணிகள் அவதி அடைந்துள்ளனர். திருவாரூர் பழைய பேருந்து நிலையத்திற்கு நாள்தோறும் 10,000க்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர்.
அங்கு கட்டண கழிப்பிடம் ஒப்பந்த அடிப்படையில் சேர் பட்ட நிலையில் இலவச கல்வி படம் நகராட்சி நிர்வாகம் சார்பில் புதிதாக கட்டப்பட்டது. ஆனால் தற்போது வரை புதிய இலவச கழிப்பறை திறக்கப்படவில்லை. இதன் காரணமாக பேருந்து நிலையம் வரும் பயணிகள் கட்டண கழிப்பறையை பயன்படுத்த நிர்பந்திக்கப்படுகின்றனர்.
இது குறித்து நகராட்சி நிர்வாகத்திடம் கேட்ட பொழுது உரிய நேரத்தில் கழிவறை திறக்கப்படும் என நகராட்சி ஆணையர் பதிலளித்தார். தினக்கூலிக்கு செல்வோரை அதிகம் வரும் பேருந்து நிலையத்தில் கட்டப்பட்டும் திறக்கப்படாமல் இலவச கழிவறையால் எந்த பயனும் இல்லை என பயணிகள் தெரிவிக்கின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





