மீண்டும் பாலியல் சர்ச்சையில் சிக்கிய ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி..!
கன்னியாகுமரி அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரியில் இரண்டு மருத்துவ மாணவிகளுக்கு ஓராண்டு முன்பு பாலியல் தொல்லை கொடுத்த மருத்துவமனை ஊழியர் கைது செய்யப்பட்டார்.
இந்த மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் படிக்கும் இரண்டு மருத்துவ மாணவிகளுக்கு பாலியல் தொழில் நடந்துள்ளதாக கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட மாணவர்கள் இரண்டு பேரும் காவல் கண்காணிப்பாளருக்கு ஆன்லைன் மூலமாக தனித்தனியாக இரண்டு புகார் மனு அனுப்பியுள்ளனர்.
அந்த மனுக்களில் ஆயுர்வேத மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மருத்துவமனை ஆய்வக உதவியாளராக பணியாற்றி வரும் சுசீந்திரன் வைரவன் என்பவர் தங்களுக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாகவும் எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
விசாரணை நடத்த உத்தரவிட்டதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து வைரவனை கைது செய்தனர். போலீஸ் விசாரணையில் இந்த சம்பவம் கடந்தாண்டு நடந்திருப்பதாகவும் வைரவன் இரண்டு மாணவர்களுக்கும் பாலியல் தொல்லை கொடுத்ததும் தெரிய வந்துள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





