--- --:--:-- --

மளிகை கடைக்காரரிடம் ஆசை வார்த்தை கூறி பணம் பறித்த இளம் பெண்..!

4

புதுச்சேரியில் மளிகை கடைக்காரரிடம் ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்று நண்பர்களுடன் சேர்ந்து கல்லூரி மாணவி பணத்தைப் பற்றிச் சென்றுள்ளார். வில்லி, தில்லியனூர், ஊரப்பாக்கம் பகுதியில் மளிகை கடை நடத்தி வரும் கருணாகரன் என்பவருடன் கல்லூரி மாணவி ஒருவர் பேசி வந்துள்ளார்.

 

இதையடுத்து ஆசை வார்த்தை கூறி கருணாகரனை புதர் பகுதிக்கு மாணவி அழைத்து சென்றுள்ளார். அங்கு மறைந்திருந்த மாணவியின் கூட்டாளிகள் மூன்று பேர் சேர்ந்து கருணாகரனை விரட்டி சுமார் ஒரு லட்சம் ரூபாயை பறித்து சென்றுள்ளனர்.

 

இது குறித்து கருணாகரன் அளித்த புகாரின் பேரில் இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள கல்லூரி மாணவி மற்றும் அவரது கூட்டாளி தேடி வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon