--- --:--:-- --

ஆட்டோ ஓட்டுனர் மற்றும் பேருந்து நடத்துனர் இடையே ஏற்பட்ட மோதல்..!

7

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள சேரன் கோட்டை தனியார் பேருந்தை மர்ம நபர்கள் வழிமறித்து தாக்கியதில் ஓட்டுநர் மற்றும் 3 பெண்கள் காயமடைந்தனர்.

 

ஒட்டன்சத்திரத்தில் இருந்து வேடசந்தூர் பேருந்து நிலையத்திற்கு சென்ற தனியார் பேருந்து, நடத்துனர் செல்வராஜ் பேருந்தில் இருந்து இறங்கி நடந்து சென்றுள்ளார். அப்பொழுது அவர் மீது ஆட்டோ ஒன்று மோத முயன்றதால் அதன் கண்ணாடியை நடத்துனர் தாக்கியதில் உடைத்ததாக கூறப்படுகிறது.

 

இதையடுத்து ஆட்டோவில் இருந்தவர்கள் நடத்துனரை தாக்கியதில் காயம் அடைந்தார். இதனால் ஒட்டன்சத்திரம் நோக்கி பேருந்து சென்றுள்ளது. அப்பொழுது ஆட்டோவில் இருந்த நபர்கள் மீண்டும் தாக்கியதில் ஓட்டுநர் கதிரேசன் மற்றும் மூன்று பெண்கள் காயமடைந்தனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon