--- --:--:-- --

திமுக மகளிர் மாநாடு வாரிசு அரசியலின் உச்சம்..!

1

குடும்ப ஆட்சியை மட்டுமே நம்புவது திமுக என்பதை மகளிர் மாநாட்டிலும் நிரூபித்துவிட்டதாக தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு விமர்சித்துள்ளார்.

 

கலைஞர் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, திமுக மகளிரணி சார்பில், திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தலைமையில் சென்னையில் நடைபெற்ற மகளிர் உரிமை மாநாட்டில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, பிரியங்கா காந்தி, சுப்ரியா சுலே, காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஆனி ராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 

இந்நிலையில் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு, திமுக மகளிர் மாநாடு வாரிசு அரசியலின் உச்சம் என விமர்சித்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon