அரசு பேருந்து கல்லூரி மாணவர்களின் ஆபத்தான பயணம்..!
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே அரசு பேருந்தில் மிக ஆபத்தான முறையில் கல்லூரி மாணவர்கள் பயணம் செய்கின்றனர். தேக்கம்பட்டியில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர்.
காலை மாலை வேலைகளில் கல்லூரி வழியாக செல்லும் பேருந்துகளில் கூட்டம் நிரம்பிவழிகிறது. மாணவர்கள் படிக்கட்டில் தொங்கி சாலைகளில் கால்களை உரசியவாறு மிக ஆபத்தான முறையில் பயணம் செய்கின்றனர்.
இதனால் மாணவர்களை ஆபத்தான பயணங்களை தவிர்க்க கூடுதல் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர். போக்குவரத்து பணிமனை கோட்டை மேலாளரிடம் கேட்ட பொழுது ஆய்வு நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





