சஞ்சய் சிங்கிற்க்கு 5 நாட்கள் அமலாக்கத்துறை காவல்..!
மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஆம் ஆத்மியின் எம்.பி. சந்திரசேகருக்கு 5 நாட்கள் காவல்துறை காவல் வழங்கப்பட்டுள்ளது.
டெல்லி மதுபான கொள்கை, ஊழல் முறைகேடு வழக்கில் ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் சிங்கிற்க்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்க துறையினர் சோதனை மேற்கொண்டனர்.
அதில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதை தொடர்ந்து சஞ்சய் சிங்கை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். இந்த நிலையில் டெல்லியில் உள்ள ரவுபாவின் சிறப்பு நீதிமன்றத்தில் சஞ்சய் சிங் ஆஜர்படுத்தப்பட்டார்.
அமலாக்கத்துறை வாதங்களை கேட்ட நீதிபதி சஞ்சய் சிங்குக்கு அக்டோபர் 10ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு அமலாக்கத்துறை காவல் வழங்கி உத்தரவிட்டார். தொடர்ந்து நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த சஞ்சய் தன் மீது பொய்யான மற்றும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





