--- --:--:-- --

பிரியாணிக்கு காசு கேட்ட கடைக்காரருக்கு அடி உதை.. இளைஞர்களின் அட்டகாசம்..!

2

சென்னை தாம்பரம் அருகே சாப்பிட்ட பிரியாணிக்கு பணம் கேட்டதால் ஊழியரை இளைஞர்கள் அடித்து உதைத்த சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. இது தொடர்பாக இருவரும் காவல்துறையினர் காவல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினர்.

 

தாம்பரம் அடுத்த வனப்பேரியில் பிரியாணி கடை ஒன்றை நடத்தி வருகிறார். இவரது உணவகத்திற்கு ஆட்டோவில் மதுபோதையில் வந்த இளைஞர் பிரியாணி ஆர்டர் செய்து சாப்பிட்டு உள்ளார். சாப்பிட்டு முடித்தவுடன் பணம் கொடுக்காமல் வெளியே சென்று அவரிடம் ஊழியர் சங்கர் பணம் கேட்டுள்ளார்.

 

பணத்தை கொடுத்த பிறகு காசு கேட்கிறாயா தான் யார் தெரியுமா என்ற தோணியில் மிரட்டி விட்டு ஆட்டோவில் வேகமாக சென்றுள்ளார். சிறிது நேரம் கழித்து ஒரு கூட்டத்துடன் மீண்டும் அந்த இளைஞர் ஊழியர் சங்கரை தாக்கினர்.

 

இதில் படுகாயம் அடைந்த சங்கர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று கையோடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் தாம்பரம் காவல்துறையினர் வெங்கடேஷ் மற்றும் உதயா ஆகிய இருவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon