--- --:--:-- --

குறுக்கே மாடு வந்தது, நான் ஒரு அப்பாவி.. ஜட்ஜ் முன் டிடிஎஃப் கூறிய பதில்..!

8

நெடுஞ்சாலையில் விபத்து ஏற்படுத்திய வழக்கில் கைதான பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசன் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

 

இது தொடர்பாக அவர் தாக்கல் செய்துள்ள மனுவில் சாலையில் மிதமான வேகத்திலேயே வந்ததாகவும் கால்நடைகள் குறுக்கே கடந்ததால் திடீரென பிரேக் போட்டதாகவும் தெரிவித்துள்ளார். இதன் காரணமாகவே பைக்கின் சக்கரம் தூக்கிதாக குறிப்பிட்டுள்ளார்.

 

ஒருவேளை பிரேக் போடாமல் இருந்திருந்தால் கால்நடை மற்றும் தனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டு இருக்கும் என்றும் தெரிவித்திருக்கிறார். சிறையில் ஆயத்திற்கு உரிய சிகிச்சை பெற முடியவில்லை எனவும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதாகவும் குறிப்பிட்டு இருக்கிறார்.

 

இதனிடையே தான் ஒரு அப்பாவி என குறிப்பிட்டுள்ள டிடிஎஃப் வாசன் எந்த ஒரு குற்றத்திலும் ஈடுபடவில்லை எனவும் நீதிமன்றத்தின் நிபந்தனைக்கு கட்டுப்படுவதாகவும் தெரிவித்திருக்கிறார். இந்த மனு இன்று விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon