--- --:--:-- --

மத்திய பிரதேச கூட்டத்தில் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி பேச்சு..!

4

த்தியில் காங்கிரஸ் ஆட்சி அமையும் போது முதலில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி உறுதிப்படுத்த தெரிவித்தார்.

 

மத்திய பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசியவர் பாரதிய ஜனதா கட்சியாலும் மாநிலங்களில் விவசாயிகள் வஞ்சிக்கப்படுவதாக குற்றம் சாட்டினார். இந்திய வரலாற்றில் முதன்முறையாக விவசாயிகள் ஜிஎஸ்டி போன்ற வரிகளை செலுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

 

நாட்டில் எத்தனை தாழ்த்தப்பட்டவர்கள் பழங்குடியினர்கள் இருக்கிறார்கள் என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் கிடைப்பது இல்லை என தெரிவித்தார்.

 

பாஜகவுக்கு எதிராக இணைந்துள்ள எதிர்கட்சிகள் அடங்கிய இந்தியா கூட்டணியில் உள்ள பெரும்பான்மையான கட்சிகள் சாதி மாறி கணக்கெடுப்பு நடத்த வலியுறுத்தி வரும் சூழலில் ராகுலின் இந்த கருத்து முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon