--- --:--:-- --

வந்தே பாரத் ரயிலால் பறிபோன உயிர்.. அதிரடி உத்தரவு..!

8

சேலம் ரயில் நிலையத்தில் வந்தே பாரத் ரயிலில் இருந்து தவறி விழுந்து பயணி பலியான சம்பவத்தில் இரண்டு ஊழியர்கள் பணிஇடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். சென்னை கீழ்கட்டளை திருவள்ளூர் பகுதியைச் சேர்ந்தவர் பால்.

 

இவர் சென்னை மாநகரப் போக்குவரத்து கழகத்தில் ஆய்வாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்ற நிலையில் தனது சகோதரியை பார்ப்பதற்காக வந்தே பாரத் விரைவு ரயில் சென்னையில் இருந்து ஈரோட்டிற்கு மனைவியுடன் சென்றார்.

 

அவசர கதவு கருகே அவர் கை வைத்திருந்த நிலையில் திடீரென்று கதவு திறக்கப்பட்டு நிலைகுலைந்த அவர் சேலம் ரயில் நிலையத்தின் நடைமேடையில் இல்லாத தண்டவாளம் பகுதியில் கீழே விழுந்தார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு உயிரிழந்தார். இந்த விவகாரம் இரண்டு ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon