காதலிக்க மறுப்பு தெரிவித்த பெண்ணை தர தரவென இழுத்துச் சென்று கத்தியால் குத்திய இளைஞர்..!

சென்னை மேடவாக்கத்தில் காதலை ஏற்க மறுத்த கல்லூரி மாணவியை பொதுவெளியில் வைத்து கத்தியால் குத்தி விட்டு தலைமறைவான கல்லூரி மாணவனை போலீசார் கைது செய்தனர்.

 

டிப்ளமோ முதலாம் ஆண்டு படித்து வந்த 16 வயது மாணவியுடன் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்படுத்திக் கொண்டவர் காதலித்ததாக கூறப்படுகிறது. புதன்கிழமை காலை கல்லூரிக்கு செல்வதற்காக மேடவாக்கம் பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்த மாணவியை தர தர என அருகில் உள்ள குறுகலான சந்துக்கு வசந்த் இழுத்துச் சென்றார்.

 

அங்கு இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு வசந்த் மாணவியை தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் குத்தி விட்டு தப்பி ஓடியதாக கூறப்படுகிறது. ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மாணவியிடம் வாக்குமூலம் பெற்ற போலீசார் நீலாங்கரையில் தலைமறைவாக இருந்த வசந்தை கைது செய்தனர்.