--- --:--:-- --

திரை பிரபலங்களின் துக்க நிகழ்வுகளில் இனி வீடியோ நோ..!

1

திரை பிரபலங்களின் துக்க நிகழ்வுகளை வீடியோ எடுக்க அனுமதி அளிக்கக்கூடாது என்று தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

 

இது குறித்து சங்கத்தின் தலைவர் பாரதிராஜா வெளியிட்டிருக்கும் அறிக்கையில் ஊடகம் என்ற பெயரில் பிரபலங்களின் துக்க வீடியோக்கள் வெளியிடுவதால் தேவையற்ற கூட்டம் சேருவதாக கூறியுள்ளார்.

 

இதனால் துக்க வீடுகளுக்கு பிரபலங்கள் வர முடியாமல் போவதாகவும் வந்தவர்களால் அங்கு இருக்க முடியாத சூழல் ஏற்படுவதாகவும் குற்றம் சாட்டியிருக்கிறார். ஊடக தர்மத்தை மீறி நடந்து கொள்பவர்களுக்கு அனுமதி வழங்கப்பட வேண்டும் என பாரதிராஜா கேட்டுக் கொண்டுள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon