தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சத்துணவு ஊழியர்கள் போராட்டம்..!
மத்தியரசை முதலமைச்சர் தொடர்ந்து விமர்சனம் செய்து வரும் நிலையில் முதலமைச்சரின் காலை சிற்றுண்டி திட்டத்தை தங்களிடமே வழங்க கேட்டு சத்துணவு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு இருக்கிறார்கள்.
அரசு பள்ளி மாணவர்களுக்கான காலை உணவு திட்டம் சமூக நலத்துறையில் மகளிர் கூட்டம் மூலம் செயல்படுத்தப்பட்டு வருவதற்கு சத்துணவு ஊழியர்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். காலை உணவு திட்டத்தை சத்துணவு ஊழியர்களுக்கு வழங்க வேண்டும்.
காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மயிலாடுதுறை, புதுக்கோட்டை, நாமக்கல், செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு மாவட்ட ஆட்சியர் அலுவலக ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





