ஈரோட்டில் காவல்நிலையத்தை முற்றுகையிட்டு திருநங்கைகள் தர்ணா..!
ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை காவல் நிலையத்தில் நேற்று காலை 10 மணி அளவில் திருநங்கைகள் முற்றுகையிட்டனர். அம்மாபேட்டை அருகே திருநங்கை புவனேஸ்வரி என்பவரின் உறவுக்கார பெண்ணை அதே பகுதியை சேர்ந்த ஒருவர் கடத்தி சென்று விட்டார்.
இது குறித்து திருநங்கை புவனேஸ்வரி உறவுக்கார பெண்ணை கடத்திச் சென்ற குடும்பத்திடம் கேட்டபோது திருநங்கை புவனேஸ்வரியை அவர்கள் தாழ்வாக பேசி அவமானப்படுத்தியதாக தெரியவந்தது. உடனடியாக அம்மாபேட்டை காவல் நிலையத்திற்கு சென்று திருநங்கை புவனேஸ்வரி புகார் அளித்தார்.
புகார் அளித்து 8 நாட்கள் ஆகியும் அம்மாபேட்டை காவல்துறை அதிகாரிகள் தேடியும் கிடைக்கவில்லை. இந்த நிலையில் திருநங்கைகள் காவல் நிலையத்தில தர்ணா போராட்டம் நடத்தி முற்றுகையிட்டனர்.
உடனடியாக உயர் காவல்துறை அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்க கோரி திருநங்கைகள் முற்றுகையிட்டதால் அம்மாபேட்டை காவல் நிலையத்தில் போலீசார் குவிக்கப்பட்டனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




