சீமான் என்னை ஏமாற்றிவிட்டார் – கதறி அழுத நடிகை விஜயலட்சுமி
சீமான் என்னை ஒரு நாள் வளசரவாக்கத்தில் இருக்கும் நாம் தமிழர் கட்சி அலுவலகத்திற்கு என்னை வரவழைத்தார். என்னை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன் என்று கூறினார். நான் என் தாய் மற்றும் சகோதரியிடம் கேட்டு சொல்கிறேன் என்று கூறி விட்டேன்.
அதன் பின்பு எனது குடும்பத்தாரை சந்தித்த சீமான், ‘உங்கள் குடும்பத்தில் ஒருவனாக இருப்பேன்’ என்று உறுதியளித்தார். அதன் பின்பு இலங்கை தமிழர் போராட்டம் தொடர்பாக சீமான் கைதாகி ஜாமினில் வெளியே வந்த பின்பு மதுரையில் தங்கியிருந்தார்.
அப்போது என்னை தொடர்பு கொண்டு, நான் தனியாக இருக்கிறேன். நான் திருமணம் செய்து கொள்ள போகும் நீங்கள் என்னுடன் இருந்தால் ஆறுதலாக இருக்கும் என கூறி என்னை மதுரை வரவழைத்தார். என்னை மீனாட்சி அம்மன் கோயில் அழைத்துச்சென்று மாலை சூடினார்.
விரைவில் விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் முன்னிலைடில் இருவருக்கும் திருமணம் நடக்க போகிறது என்று வாக்குறுதி கொடுத்தார்.நான் ஏழு முறை கருவுற்றேன். அரசியலில் நான் பெரிய ஆளாக வர வேண்டும் எனக்கூறி என்னை கட்டாயப்படுத்தி கருகலைப்பு செய்ய வைத்தார்.
என்னுடன் குடும்பம் நடத்தி, என்னை கட்டாய கருகலைப்பு செய்ய வைத்து,ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி எனது மனதை உடலையும் கெடுத்த சீமானை கைது செய்ய வேண்டும் என விஜயலட்சும் புகார் அளித்திருக்கிறார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




