--- --:--:-- --

கலைஞர் நூற்றாண்டு விழா குறித்து முதலமைச்சர் இன்று ஆலோசனை..!

1

ருணாநிதி நூற்றாண்டு விழா குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திமுக நிர்வாகிகளுடன் இன்று ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை தமிழக முதல்வர் சிறப்பாக கொண்டாட திமுகவினர் ஆயத்தம் ஆகி வருகின்றனர்.

 

இந்த நிலையில் கருணாநிதி நூற்றாண்டு விழா கொண்டாட்டம் குறித்து கட்சியினருடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துகிறார். சென்னையில் உள்ள திமுகவின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் அவரது தலைமையில் காலை 10:30 மணிக்கு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

 

இந்த கூட்டத்தில் நூற்றாண்டு விழா குழு உறுப்பினர்கள் திமுகவின் அனைத்து அணைகளின் செயலர்கள், அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்டோருடன் முதலமைச்சர் ஆலோசிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon